துாய்மை விழிப்புணர்வு இயக்கம்

வேடசந்தூர்: வேடசந்தூர் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் வாஸ் இன்ஸ்டிடியூட், வீகா பவுண்டேஷன் சார்பில் குடிநீர், சுகாதாரம் தொடர்பான 'என் ஊர், என் பெருமை, கிளீன் வேடசந்தூர்'எனும் தூய்மை விழிப்புணர்வு இயக்கம் நேற்று துவக்கப்பட்டது.

பேரூராட்சி தலைவர் மேகலா, துணைத் தலைவர் சாகுல் ஹமீது துவக்கி வைத்தனர்.

துண்டு பிரசுரம் மூலமாகவும், ஒலிபெருக்கி வாயிலாகவும் குப்பைகளை முறையாக பிரித்துக் கொடுத்தல் பற்றியும், குப்பைகளை திறந்த வெளியில் கொட்டுவது, எரிப்பது கூடாது குறித்தும் விளக்கப்பட்டது.

Advertisement