துருக்கி ட்ரோனை துவம்சம் செய்த இந்தியா

ஜம்மு - காஷ்மீர் முதல் குஜராத் வரையிலான எல்லை மாநிலங்களில், இரண்டு நாள் இரவு பாகிஸ்தான் தொடர்ச்சியாக, ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது.

இந்திய ராணுவம் மற்றும் பாதுகாப்பு படைகள் அதிரடியாக செயல்பட்டு, அவற்றை வானிலேயே செயலிழக்கச் செய்தன.

ஜம்மு - காஷ்மீரின் நவ்ஷேரா பகுதியில், ஒரு கிராமத்தில் இருந்து மீட்கப்பட்ட ஒரு ட்ரோன்,- துருக்கி நாட்டில் தயாரித்த, 'காமிகேஸ்' ரக கார்கு - 2 ட்ரோன் என தெரியவந்தது. இது துருக்கியின் ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள எஸ்.டி.எம்., எனும் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அதிநவீன ட்ரோன், தானியங்கி செயல்பாடு கொண்டது. முன்னரே பல முறை நன்கு சோதிக்கப்பட்டு, அனைத்து தேர்வுகளிலும் சிறந்ததாக கருதப்படுகிறது. குறிப்பிட்ட இலக்கை துல்லியமாக தாக்கக்கூடியது. 1.3 கிலோ எடையுள்ள வெடிமருந்தை எடுத்துச்சென்று தாக்கும் திறன் கொண்டது.

எனினும், இந்தியாவின் பாதுகாப்பு கவச அமைப்புகள் இடைமறித்து தாக்கி, துருக்கி ட்ரோனையே அடித்து நொறுக்கி உள்ளன.

Advertisement