இந்திய ராணுவத்திற்காக பெண்கள் கோயிலில் வழிபாடு

தஞ்சாவூர்:இந்திய ராணுவம் வலிமை பெற வேண்டி, கும்பகோணம் காத்தாயி அம்மன் கோயிலில், பெண்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

காஷ்மீர் மாநிலம் பஹல்காமில், சில தினங்களுக்கு முன்பு, பயங்கரவாதிகளால் சுற்றுலா பயணிகள் இறந்தனர். இத்தாக்குலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இரண்டு நாட்களாக, இந்திய ராணுவம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் தொடர்ந்து வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், இந்திய ராணுவம் வலிமை பெறவும், பிரதமர் நரேந்திர மோடிக்கு உலக நாடுகள் ஆதரவு கரம் கொடுக்கவும், பயங்கரவாதம் முறியடிக்க இந்திய ராணுவம் வலிமை பெற வேண்டும், நாடு அமைதி பெற வேண்டும் என, நாடுமுழுவதும் பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

அந்தவகையில், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் காத்தாயி அம்மன் கோயிலில் நேற்று, ஸ்ரீ சிவ லலிதா குழுவினர் கூட்டு பிராத்தனையில் ஈடுபட்டனர். இதில், தேசியக்கொடியை கையில் ஏந்தி, ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் பாடி, பெண்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

Advertisement