தி.மு.க., ஆட்சியின் 4 ஆண்டுகளுமே வேதனையானவை: அண்ணாமலை 'சுளீர்'

துாத்துக்குடி : ''தி.மு.க., ஆட்சியில் நான்கு ஆண்டுகளும் வேதனையானவை,'' என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
தாக்குதல்
துாத்துக்குடியில், நேற்று அவர் அளித்த பேட்டி:
இந்தியா - -பாகிஸ்தான் பிரச்னை நீண்ட காலமாக இருந்து வருகிறது.
தொடர்ந்து அத்துமீறி வரும் பாக்., மீது அறத்தின் அடிப்படையில் இந்தியா தாக்குதல் நடத்தி வருகிறது. ட்ரோன்களை நம் நாட்டுக்குள் அனுப்பி தாக்குதல் நடத்தி உள்ளனர்.
பாக்., தீவிரவாதிகள் செய்த தவறுக்கு, அந்நாட்டில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது மட்டுமே தாக்குதல் நடத்துகிறோம். ஆனால், பாக்., நம் நாட்டு அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துகிறது. நாம் எந்த நாட்டின் எல்லையை பிடிப்பதற்காகவும் சண்டை போடவில்லை.
நம் நாட்டின் மீது நடத்தப்பட்டுள்ள பயங்கரவாதிகள் தளங்கள் மீது தாக்குதல் நடத்துகிறோம். நம் நாட்டின் நடவடிக்கையை பார்த்த பின், ஓர் உயிரை எடுப்பதற்கு பாக்., பயப்பட வேண்டும்.
பொருளாதாரம்
இந்திய ராணுவ வீரர்களுக்காக, முதல்வர் ஸ்டாலின் முன்னெடுக்கும் பேரணி வரவேற்கத்தக்கது. இந்த நேரத்தில் முழு ஒத்துழைப்பை, அவர் மத்திய அரசுக்கு கொடுக்க வேண்டும்.
தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி நடத்திய நான்கு ஆண்டுகளும் வேதனை யானவை. பொருளாதாரத்தில் தமிழகம் பின்நோக்கி செல்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
லக்னோவில் பிரம்மோஸ் ஏவுகணை உற்பத்தி ஆலை இன்று துவக்கம்; சிறப்புகள் ஏராளம்!
-
முகத்தில் மிளகாய் பொடி தூவி 6 பவுன் தங்க செயின் பறிப்பு
-
அடுத்து என்ன? டில்லியில் முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி சந்திப்பு!
-
போர் நிறுத்தம்; பாக்., இந்தியா ஆகிய இரு நாடுகளை பாராட்டிய தலைவர்கள் பட்டியல்!
-
மத்தியஸ்தம் செய்ய தயார்: காஷ்மீர் பிரச்னையில் மூக்கை நுழைக்கும் டிரம்ப்!
-
போர் நிறுத்தத்திற்கு பின் நடந்தது என்ன? இன்று ராணுவம் முக்கிய அறிவிப்பு