டிராக்டர் மோதி பெண் பலி

சங்கராபுரம்: சேலம் மாவட்டம், தலைவாசல் அடுத்துள்ள மணிவிழுந்தான் கிராமத்தை சேர்ந்தவர் வரதராஜன் மனைவி ராஜாம்பாள், 60; விவசாய கூலி. இவரது மகன் வெங்கடேசன், 30; எலக்ரிஷியன். இவர் பெண் பார்க்க, நேற்று தாய் ராஜாம்பாளுடன், பைக்கில் மணிவிழுந்தானில் இருந்து, சங்கராபுரம் அடுத்த எஸ்.வி.பாளையம் காட்டு கொட்டாய்க்கு சென்று கொண்டிருந்தார்.

ஊராங்காணி அருகே சென்றபோது, எதிரே வந்த டிராக்டர் டிப்பர் வெங்கடேசன், ஓட்டிவந்த பைக் மீது மோதியது.

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த ராஜாம்பாள் சம்பவ இடத்திலேயே, உயிரிழந்தார். சங்கராபுரம் போலீசார் அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வெங்கடேசன் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்து குறித்து டிராக்டர் டிரைவர் எஸ்.வி.பாளையம் ரங்கநாதன் மகன் ரஞ்சித், 40; மீது சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement