சின்னமனுாரில் 2வது நாளாக தேரோட்டம்

சின்னமனூர் : சின்னமனூர் சிவகாமியம்மன் உடனுறை பூலாநந்தீஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம் இரண்டாவது நாளாக நேற்று மாலை 5:00 மணிக்கு துவங்கி 6.45 மணிக்கு நிலைக்கு வந்தது.

சின்னமனூர் சிவகாமியம்மன் உடனுறை பூலாநந்தீஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா தேரோட்ட நிகழ்ச்சி

மே 1ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் மாலை 5:05 மணிக்கு வடக்கு ரத வீதியில் உள்ள நிலையில் இருந்து தேரோட்டம் துவங்கி, மேற்கு ரத வீதி முடிவில் நிறுத்தப்பட்டது. நேற்று மாலை இரண்டாவது நாளாக சிவ வாத்தியங்கள் முழங்க, ஆயிரக்கணக்கான பக்தர்கள் 'ஹர ஹர மகாதேவா' என்ற கோஷத்துடன் வடம் பிடித்து தேரை இழுத்தனர். தெற்கு ரத வீதி, மேற்கு ரத வீதி வழியாக மாலை 6:45 மணிக்கு தேர் நிலைக்கு வந்தது.

தேரோட்டத்தில் சின்னமனூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்தவர்களும் திரளாக பங்கேற்றனர்.

Advertisement