வெம்பக்கோட்டை அணை, வைப்பாற்றில் சீமைக் கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு

சிவகாசி : வெம்பக்கோட்டை அணையிலும், வைப்பாற்றிலும் சீமைக் கருவேல மரங்கள் ஆக்கிரமித்து இருப்பதால் தண்ணீர் மட்டம் குறைந்து வருதோடு, தண்ணீர் செல்வதற்கும் வழி இல்லாததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். எனவே சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
வெம்பக்கோட்டையில் வைப்பாற்றின் குறுக்கே 1986 ல் அணை கட்டப்பட்டது. 23 அடி உயரம் கொண்ட அணையில் 5 மதகுகள் உள்ளது. இந்த அணைக்கு மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து காயல்குடி, சீவலப்பேரி உள்ளிட்ட கிளை ஆறுகளில் இருந்து தண்ணீர் வருகின்றது. வெம்பக்கோட்டை, சூரார்பட்டி, கோட்டைப்பட்டி, கரிசல்குளம். சல்வார் பட்டி, ஏழாயிரம் பண்ணை, விஜய கரிசல்குளம் உட்பட 20 க்கும் மேற்பட்ட கிராமங்களில் 3300 ஹெக்டர் பாசன வசதி உடையது.
மேலும் அணையில் இருந்து சிவகாசி மாநகராட்சிக்கு தினமும் 20 லட்சம் லிட்டர் குடிநீர் கொண்டு செல்லப்பட்டு முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. தவிர அணையை சுற்றியுள்ள கிராமப் பகுதியில் கிணற்று பாசனத்திலும் விவசாய பணிகள் நடந்து வருகின்றது. இந்நிலையில் அணையில் பெரும்பான்மையான பகுதியில் சீமைக் கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளது. தண்ணீர் விரைவிலேயே சீமைக் கருவேல மரங்ளால் உறிஞ்சப்பட்டு தண்ணீர் மட்டம் குறைய வாய்ப்புள்ளது.
மேலும் வைப்பாறு முழுவதுமே இடைவெளிஇல்லாமல் சீமைக் கருவேல மரங்கள் நிறைந்துள்ளது. இதனால் தண்ணீர் செல்ல வழியில்லை என விவசாயிகள் கவலையில் உள்ளனர். மேலும் கிணற்று பாசனம் பாதிக்கப்படுவதோடு, குடிநீர் ஆதாரமும் பாதிக்கப்படுகின்றது.
எனவே உடனடியாக அணையில், ஆற்றில் ஆக்கிரமித்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும்
-
காஷ்மீர் பிரச்னையில் மத்தியஸ்தம் செய்ய தயார்: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு
-
போர் நிறுத்தத்திற்கு பின் நடந்தது என்ன? காலை 11 மணிக்கு ராணுவம் முக்கிய அறிவிப்பு
-
கோவையில் தாயை பிரிந்த குட்டி யானை: முதுமலை யானைகள் முகாமில் ஒப்படைப்பு
-
என்.எல்.சி.,யில் தீ விபத்து; பல கோடி ரூபாய் மதிப்பு பொருட்கள் சேதம்!
-
போர் நிறுத்த ஒப்பந்தம்; உக்ரைனுடன் நேரடி பேச்சுவார்த்தைக்கு புடின் அழைப்பு!
-
'கொடுத்த வாக்குறுதியை முதல்வர் காப்பாற்றணும்'