டயாலிசிஸ் பிரிவில் 'ஏசி' இயந்திரம் பழுது

சிவகங்கை : சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை டயாலிசிஸ் பிரிவில் ஏசி பழுதானதால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.

சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரி 2012 முதல் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள டயாலிசிஸ் பிரிவில் 14 டயாலிசிஸ் இயந்திரம் உள்ளது.

தினசரி காலை 12 பேருக்கும் மதியம் 12 பேர் என ஒரு நாளைக்கு 24 பேருக்கு டாயாலிசிஸ் செய்கின்றனர். மீதமுள்ள இரண்டு இயந்திரத்தில் மஞ்சள்காமாலை பாதித்தவர்கள் எச்.ஐ.வி., பாதித்தவர்களுக்கு டயாலிசிஸ் செய்யப்படுகிறது.

வாரத்தில் 7 நாட்களும் இங்கு டயாலிசிஸ் செய்வதற்கு நோயாளிகள்மாவட்டத்தின் பிற பகுதியில் இருந்தும் அருகில் உள்ள மாவட்டங்களான ராமநாதபுரம் புதுக்கோட்டை பகுதியில் உள்ள கிராமங்களில் இருந்தும் டயாலிசிஸ் சிகிச்சை பெற சிவகங்கை மருத்துவமனைக்கு வருகின்றனர்.

இந்நிலையில் டயாலிசிஸ் பிரிவில் உள்ள குளிர்சாதனங்கள் பழுதடைந்துஉள்ளது. கோடை காலம் என்பதால் வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் நோயாளிகள் டாக்டர்கள் சிரமப்படுகின்றனர்.

மருத்துவமனை நிர்வாகம் டயாலிசிஸ் பிரிவில் பழுதடைந்துள்ள ஏசியை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement