இந்திரா நகர் பஸ் ஸ்டாப்பில் இரவில் பயணிகள் அச்சம்

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் இந்திரா நகர் பஸ் ஸ்டாப் பகுதியில் மின்விளக்குகள் இல்லாததால் இரவில் பயணிகள் அச்சம் அடைகின்றனர்.

ஆர்.எஸ்.மங்கலம் இந்திரா நகர் பகுதியில் யூனியன் அலுவலகம், வேளாண் அலுவலகம், கால்நடை மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களும், தொழில் நிறுவனங்களும் அதிகளவில் அமைந்துள்ளன.

இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் அலுவலர்கள், இந்திரா நகர் பஸ் ஸ்டாப் வந்து செல்லும் நிலை உள்ளது.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக தேசிய நெடுஞ்சாலை யூனியன் அலுவலகம் முதல் இந்திரா நகர் பஸ் ஸ்டாப், கைகாட்டி விளக்கு வரை மின்விளக்குகள் எரிவதில்லை.

மின்விளக்குகள் காட்சி பொருளாக மட்டுமே உள்ள நிலையில் மின்விளக்கு பராமரிக்கப்படாத நிலையில் உள்ளதால் இரவில் இருள் சூழ்ந்துள்ளது.

இதனால் இரவு நேரங்களில் வெளியூர் சென்று விட்டு ஊர் திரும்பும் பெண் பயணிகள் கடும் அச்சத்தை சந்திக்கின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தினர்.

Advertisement