அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எடுப்பதற்கு காத்திருப்பு
ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எடுப்பதற்காக நோயாளிகள் காத்திருக்கும் அவல நிலை உள்ளது.மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு தினமும்ஆயிரத்திற்கும் மேற்பட்ட புற நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். 700க்கும் மேற்பட்ட உள் நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர்.
நோயாளிகளின் நோய்கள் குறித்து அறிவதற்காக டாக்டர்கள் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எடுக்க நோயாளிகளுக்கு பரிந்துரை செய்கின்றனர். அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எடுக்க போதிய டாக்டர்கள் இல்லாத நிலையில் ஒரே ஒரு டாக்டர் மட்டுமே எடுக்கிறார். இதனால் புற நோயாளிகளுக்கு இந்த மாதத்தில் எடுக்க வேண்டியவர்களுக்கு அடுத்த மாதம் வரச் சொல்லிஅனுப்புகின்றனர்.
நோயாளிகளின் தன்மை தெரிந்தால் மட்டுமே நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க முடியும். ஸ்கேன் எடுப்பது வரை நோய் காத்திருக்குமா.
அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுத்து அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் உடனடியாக எடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
மேலும்
-
போர் நிறுத்தம்; பாக்., இந்தியா ஆகிய இரு நாடுகளை பாராட்டிய தலைவர்கள் பட்டியல்!
-
மத்தியஸ்தம் செய்ய தயார்: காஷ்மீர் பிரச்னையில் மூக்கை நுழைக்கும் டிரம்ப்!
-
போர் நிறுத்தத்திற்கு பின் நடந்தது என்ன? இன்று ராணுவம் முக்கிய அறிவிப்பு
-
கோவையில் தாயை பிரிந்த குட்டி யானை: முதுமலை யானைகள் முகாமில் ஒப்படைப்பு
-
என்.எல்.சி.,யில் தீ விபத்து; பல கோடி ரூபாய் மதிப்பு பொருட்கள் சேதம்!
-
போர் நிறுத்த ஒப்பந்தம்; உக்ரைனுடன் நேரடி பேச்சுவார்த்தைக்கு புடின் அழைப்பு!