கதவை உடைத்து நகை,பணம் திருட்டு

வேடசந்துார் : நேருஜி நகரில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து ஆறரை பவுன் நகை ரூ.90 ஆயிரம் திருடப்பட்டது.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் தினேஷ் நாத் 38 . வேடசந்தூர் நேருஜி நகரில் வீட்டில் குடி இருக்கிறார்.

நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நிலையில் காம்பவுண்ட் சுவரை ஏறி குதித்து உள்ளே சென்ற கொள்ளையர்கள் கதவின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ஆறரை பவுன் நகை, ரூ.90 ஆயிரத்தை திருடி சென்றனர். வேடசந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement