தொழில் நுட்ப மாதிரி கண்காட்சி 

ராமநாதபுரம் : -ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரியில் தொழில் நுட்பமாதிரி கண்காட்சி நடந்தது. முதல்வர் பெரியசாமிதலைமை வகித்தார். மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை பேராசிரியை சித்தி ஷமீம் பாத்திமா வரவேற்றார்.

சிறப்பு விருந்தினர்களாக தனியார், அரசுநிறுவனங்களில் பணிபுரியும் கல்லுாரியின் முன்னாள் மாணவர்கள் அபிநயா, கண்ணதாசன், இப்ராஹிம் ரகமத்துல்லா, சுதீப், கிேஷார்குமார் உட்பட பலர்பங்கேற்றனர்.

கண்காட்சியில் மாணவர்கள் ஆராய்ச்சி படைப்புகள் காட்சிக்காகவைக்கப்பட்டது. சிறந்த ஆராய்ச்சி படைப்பை சிறப்பு விருந்தினர்கள் தேர்வு செய்து பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கினர்.

Advertisement