1008 திருவிளக்கு பூஜை

திருவாடானை : திருவாடானை அருகே அஞ்சுகோட்டை ஆனிமுத்து கருப்பர் கோயில் திருவிழா மே 3ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் இரவு 1008 திருவிளக்கு பூஜை நடந்தது.

அஞ்சுகோட்டை, கரையக்கோட்டை, சுப்பிரமணியபுரம், பொட்டக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர். முன்னதாக சிறப்பு தீபாராதனை நடந்தது. இரவில் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

Advertisement