தன்னை கொல்ல முயன்ற கணவரை கொன்றார் மனைவி

எரியோடு : மது போதையில் தன்னை கொல்ல முயன்ற கணவரை, கழுத்தை நெரித்து கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், எரியோடு, அச்சணம்பட்டியைச் சேர்ந்தவர் தனியார் மில் வேன் டிரைவர் முருகபாண்டி, 42. இவரது மனைவி முத்துலட்சுமி, 35. முருகபாண்டி வருமானத்தில் பெரும் பகுதியை மது குடித்துவிட்டு, வீட்டு செலவிற்கு பணம் தராமல் இருந்தார்.
மேலும், செலவுக்கு பணம் கேட்ட முத்துலட்சுமியிடம் தினமும் தகராறு செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, மது போதையில் வந்த முருகபாண்டி தகராறு செய்து, முத்துலட்சுமியை தாக்கி கழுத்தை நெரித்தார். ஆத்திரமடைந்த முத்துலட்சுமி, முருகபாண்டியின் கழுத்தை நெரித்ததில் மயங்கி விழுந்து இறந்தார். முத்துலட்சுமியை எரியோடு போலீசார் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மே 14,15ம் தேதி 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் கணிப்பு
-
பார்லி சிறப்பு கூட்டம் நடத்த வேண்டும்: பிரதமர் மோடிக்கு ராகுல், கார்கே கடிதம்
-
பிரம்மோஸ் ஏவுகணை இந்தியாவின் பெருமை: ராஜ்நாத் சிங் பெருமிதம்!
-
இலங்கையில் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து; 21 பேர் பரிதாப பலி
-
'ஆபரேஷன் சிந்தூர்' தொடர்கிறது; இந்திய விமானப்படை திட்டவட்டம்
-
லக்னோவில் பிரம்மோஸ் ஏவுகணை உற்பத்தி ஆலை திறப்பு; சிறப்புகள் ஏராளம்!
Advertisement
Advertisement