இந்தியா, பாகிஸ்தான் போர் நிறுத்தம் மகிழ்ச்சி அளிக்கிறது: புதிய போப் முதல் உரை!

7

ரோம்: இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்த அறிவிப்பு எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என புதிய போப் லியோ தெரிவித்தார்.



அமெரிக்காவை சேர்ந்த ராபர்ட் பிரீவோஸ்ட், 69, புதிய போப் ஆக தேர்வு செய்யப்பட்டார். இவர் போப் 14ம் லியோ என்று அழைக்கப்படுகிறார். இவர், புதிய போப்பாக பொறுப்பேற்று கொண்ட பின்னர் முதல் ஞாயிற்று கிழமையான இன்று (மே 11) பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:


உக்ரைன் மக்கள் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். விரைவில் அமைதியை கொண்டு வர அனைத்தையும் செய்ய வேண்டும். அனைத்து பிணை கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும். காசா பகுதியில் நடக்கும் சம்பவங்களால் நான் மிகவும் வருத்தமடைந்துள்ளேன். உடனடியாக போர் நிறுத்தம் கொண்டு வர வேண்டும்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவி வழங்கப்பட வேண்டும். இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்த அறிவிப்பு எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் வரவிருக்கும் பேச்சுவார்த்தைகள் மூலம் விரைவில் ஒரு நல்ல ஒப்பந்தம் எட்டப்படும் என்று நம்புகிறேன். உலகில், அமைதிக்கான அற்புதம் ஏற்படுவதற்கு கடவுள் ஆசி வழங்கும்படி வேண்டி கொள்கிறேன். இவ்வாறு போப் லியோ பேசினார்.

Advertisement