தமிழகத்தில் மே 14,15ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் தகவல்

1

சென்னை: தமிழகத்தில் மே 14, 15ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: தென் மேற்கு பருவமழை அந்தமான் கடல், அந்தமான் மற்றும் நிகோபார் தீவு மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை துவங்கும்.


நீலகிரி, கோவை மற்றும் ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மே 14ம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


மே 15ம் தேதி நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement