இந்திய ஜோடிக்கு வெண்கலம்: உலக துப்பாக்கி சுடுதலில்

நிகோசியா: உலக கோப்பை ஷாட்கன் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் கினான் செனாய், சபீரா ஹாரிஸ் ஜோடி வெண்கலம் வென்றது.

சைப்ரசில், உலக கோப்பை ஷாட்கன் துப்பாக்கி சுடுதல் தொடர் நடந்தது. இதில் 'டிராப்' கலப்பு அணிகளுக்கான தகுதிச் சுற்றில் இந்தியாவின் கினான் செனாய், சபீரா ஹாரிஸ் ஜோடி 142.4 புள்ளிகளுடன் 4வது இடம் பிடித்தது. அடுத்து நடந்த வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியா, துருக்கி அணிகள் மோதின. இதில் அசத்திய கினான் செனாய், சபீரா ஹாரிஸ் ஜோடி 34-33 என்ற கணக்கில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றது. இது, இத்தொடரில் இந்தியாவுக்கு கிடைத்த ஒரே பதக்கம்.
தங்கப்பதக்கத்துக்கான போட்டியில் சீனா, போலந்து அணிகள் மோதின. இதில் சீனா 42-39 என வெற்றி பெற்று தங்கத்தை கைப்பற்றியது.

Advertisement