கிளாசிக் செஸ்: பிரக்ஞானந்தா 'டிரா'

புக்காரெஸ்ட்: கிளாசிக் செஸ் தொடரின் 4வது சுற்றை இந்தியாவின் பிரக்ஞானந்தா 'டிரா' செய்தார்.
கிராண்ட் செஸ் 10வது சீசன், 6 தொடர்களாக நடத்தப்படுகிறது. கடந்த மாதம் போலந்தில் முதல் தொடர் நடந்தது. இதன் 2வது தொடர், ருமேனியாவில் நடக்கிறது. இந்தியாவின் பிரக்ஞானந்தா, குகேஷ், உஸ்பெகிஸ்தானின் நாடிர்பெக், அமெரிக்காவின் வெஸ்லே உள்ளிட்ட 10 பேர் பங்கேற்கின்றனர்.
நான்காவது சுற்றில் தமிழகத்தின் பிரக்ஞானந்தா, ருமேனியாவின் டீக் போக்டன் டேனியல் மோதினர். கருப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, 35வது நகர்த்தலில் போட்டியை 'டிரா' செய்தார்.
மற்றொரு போட்டியில் குகேஷ் (கருப்பு), பிரான்சின் மாக்சிம் வாச்சியர்-லக்ரேவ் (வெள்ளை) மோதினர். இதில் ஏமாற்றிய குகேஷ், 31வது நகர்த்தலில் தோல்வியடைந்தார்.
அமெரிக்காவின் பேபியானா காருணா, சோ வெஸ்லி, தங்களது போட்டியை 'டிரா' செய்தனர். மற்றொரு அமெரிக்க வீரர் லெவோன் ஆரோனியன், போலந்தின் டுடாவை வீழ்த்தினார்.
நான்கு சுற்றுகளின் முடிவில் அமெரிக்காவின் பேபியானா காருணா (2.5 புள்ளி) முதலிடத்தில் நீடிக்கிறார். அடுத்த இரு இடங்களில் தலா 2.5 புள்ளிகளுடன் பிரக்ஞானந்தா, வாச்சியர்-லக்ரேவ் உள்ளனர். குகேஷ் (1.5 புள்ளி) 9வது இடத்தில் உள்ளார்.
மேலும்
-
10 நாட்கள் நடைபெறும் 'ஆபரேஷன் சிந்தூர்' சாதனை திரங்கா யாத்திரை: பா.ஜ., திட்டம்
-
எகிறிய பங்குச்சந்தைகள்: சென்செக்ஸ் 3000 புள்ளிகள் அதிகரிப்பு
-
உ.பி.,யில் பிறந்த 17 குழந்தைகளுக்கு சிந்துார் என பெயர் சூட்டி மகிழ்ந்த பெற்றோர்
-
வாட்ஸ் அப்பில் பாகிஸ்தான் உளவுத்துறை: மக்களுக்கு ராணுவம் எச்சரிக்கை
-
சென்னையில் பிரபல துணிக்கடையில் திடீர் தீ; அலறி ஓடிய ஊழியர்கள், பொதுமக்கள்
-
பாகிஸ்தானின் பொய் அம்பலம்: காஷ்மீரில் மக்கள் வசிப்பிடத்தில் வீசிய குண்டுகள் கண்டெடுப்பு