'கிராண்ட் ப்ரி' செஸ்: வைஷாலி ஏமாற்றம்

கிராஸ்லோப்மிங்: 'கிராண்ட் ப்ரி' செஸ் தொடரின் 5வது சுற்றில் இந்திய வீராங்கனை வைஷாலி தோல்வியடைந்தார்.
சர்வதேச செஸ் கூட்டமைப்பு சார்பில் பெண்களுக்கான 'கிராண்ட் ப்ரி' செஸ் தொடர், 6 கட்டமாக நடத்தப்படுகிறது. இதில் 'டாப்----2' இடம் பிடிப்பவர்கள், கேண்டிடேட்ஸ் தொடரில் (உலக கோப்பை தகுதி போட்டி) பங்கேற்கலாம். இதுவரை முடிந்த 5 கட்ட போட்டிகளின் முடிவில் ரஷ்யாவின் அலெக்சாண்ட்ரா (308.34 புள்ளி), இந்தியாவின் ஹம்பி (279.17) முதலிரண்டு இடத்தில் உள்ளனர்.
இதன் கடைசி, 6வது தொடர் ஆஸ்திரியாவில் நடக்கிறது. இந்தியா சார்பில் தமிழகத்தின் வைஷாலி பங்கேற்கிறார். இதன் 5வது சுற்றில் வைஷாலி, சீனாவின் ஜினர் ஜு மோதினர். இதில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய வைஷாலி, 59வது நகர்த்தலில் தோல்வியடைந்தார்.
ஐந்து சுற்றுகளின் முடிவில் வைஷாலி, 3.0 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளார். முதலிரண்டு இடங்களில் உக்ரைனின் அனா முசிசுக், சீனாவின் ஜினர் ஜு (தலா 3.0 புள்ளி) உள்ளனர்.
மேலும்
-
என் சந்தோஷத்தின் அடையாளங்கள்..
-
பொய் பிரசாரம் செய்யும் பாகிஸ்தான்; அது உலகிற்கே தெரியும்; காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா குற்றச்சாட்டு
-
சிறப்பு அரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு
-
பாகிஸ்தான் ஏவிய துருக்கி நாட்டு ட்ரோன்கள்; அடித்து நொறுக்கியது இந்திய ராணுவம்; தளபதி பெருமிதம்
-
காந்தாரா பட நடிகர் திடீர் மரணம்; திருமண நிகழ்வில் சோகம்
-
தமிழகத்தில் மே 14,15ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் தகவல்