தேடப்படும் காலிஸ்தான் பயங்கரவாதி பீஹாரில் கைது

புதுடில்லி: பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., அமைப்புடன் தொடர்புடைய பப்பர் கல்சா பயங்கரவாதி ஒருவனை தேசிய புலனாய்வு அமைப்பு இன்று கைது செய்தது.

தேசிய புலனாய்வு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை:

காலிஸ்தான் பயங்கரவாத சதி வழக்கு தொடர்பாக உள்ளூர் போலீசாருடன் ஒருங்கிணைந்து பீகாரின் மோதிஹாரியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இதில் பஞ்சாபின் லூதியானாவைச் சேர்ந்த காஷ்மீர் சிங் கல்வாடியை கைது செய்தோம்.
இவன், நாபா சிறையில் இருந்து தப்பியதிலிருந்து, காஷ்மீர் சிங் ரிண்டா உட்பட காலிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தீவிரமாக தொடர்பு கொண்டிருந்தது தெரியவந்தது. மேற்கொண்டு தீவிர விசாரணை நடந்து வருகிறது.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement