சத்தீஸ்கரில் ஆபரேஷன் சங்கல்ப் வேட்டை தீவிரம்: 31 நக்சல்கள் என்கவுன்ட்டரில் பலி

1

ராய்பூர்: சத்தீஸ்கரில் அண்மையில் நடந்த என்கவுன்ட்டர்களில் 31 நக்சல்கள் கொல்லப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.



கரேகுட்டா மலைத்தொடரானது தெலுங்கானா எல்லையில் உள்ள பிஜாப்பூர் மாவட்டத்தில் இருக்கிறது. ஏப்.21ம் தேதி முதல் அங்கு நக்சல்கள் ஒழிப்பு நடவடிக்கை (ஆபரேஷன் சங்கல்ப்) தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.


இதுகுறித்து போலீசார் கூறி உள்ளதாவது;


தொடர் நடவடிக்கையின் பலனாக, 31 நக்சல்கள் கொல்லப்பட்டு உள்ளனர். அவர்களில் 20 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளது.


11 பேரின் சடலங்கள் உரிய பிரேத பரிசோதனைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்கு பின்னர் அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. மற்ற சடலங்கள் விரைவில் அடையாளம் காணப்படும்.


இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

இந்த தாக்குதல்கள் எப்போது நடைபெற்றது என்பது பற்றிய விவரங்களை போலீசார் வெளியிடவில்லை.

Advertisement