தி.மு.க., சாதனை விளக்க பொதுக் கூட்டம்

கிள்ளை: சிதம்பரம் அடுத்த லால்புரத்தில், புவனகிரி கிழக்கு ஒன்றிய தி.மு.க., சார்பில், அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம் நடந்தது.

ஒன்றிய செயலாளர் மனோகர் தலைமை தாங்கினார். புவனகிரி நகர செயலாளர் கந்தன், அவைத் தலைவர் நெடுமாறன் முன்னிலை வகித்தனர்.

ஒன்றிய அவைத் தலைவர் மாறன் வரவேற்றார். கூட்டத்தில், தலைமை கழக பேச்சாளர் ரமேஷ், புவனகிரி சட்டசபை தொகுதி பார்வையாளர் சிவா ஆகியோர் தி.மு.க., அரசின் நான்காண்டு கால சாதனைகளை விளக்கி பேசினர்.

கூட்டத்தில், நிர்வாகிகள் வெற்றிவேல், செல்லபாண்டியன், பாலமுருகன், மேகநாதன், அருண்குமார், சண்முகம், ஸ்ரீராமன், எழில்வேந்தன், அரவிந்தன் உட்பட பலர் பங்கேற்றனர்.

ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் நடராஜ் நன்றி கூறினார்.

Advertisement