முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

பெருங்குடி : மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரியில் 2000-----2003ல் படித்த மாணவர்கள் 25 ஆண்டுகளுக்கு பின்பு சந்தித்தனர்.முதல்வர் சந்திரன் தலைமை வகித்தார்.ஓய்வுபெற்றபேராசிரியர் முருகேசன் முன்னிலை வகித்தார். உடற்கல்வி இயக்குனர் யுவராஜ் வரவேற்றார். வணிகவியல் துறைத் தலைவர் ஜெயக்கொடி, பேராசிரியர் சாந்தகுமார் பேசினர்.

53 க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் தங்களது குடும்பத்தினருடன் பங்கேற்றனர்.அவர்கள்கூறுகையில் ''ஆண்டுதோறும் வசதியற்ற மாணவர்கள் இருவருக்கு கல்விக் கட்டணம் செலுத்த முடிவு செய்தோம். இந்தாண்டுஇருவருக்குவழங்கப்பட்டது'' என்றனர். முன்னாள் மாணவர் தேவசகாயம் நன்றி கூறினார்.

Advertisement