தி.மு.க., சாதனை விளக்க கூட்டம்

நத்தம் : நத்தத்தில் காந்தியார் கலையரங்கில் தெற்கு ஒன்றிய தி.மு.க., சார்பாக அரசின் நான்காமாண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.

தெற்கு ஒன்றிய செயலாளர் ரத்தினக்குமார் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., ஆண்டி அம்பலம், மாவட்ட பொருளாளர் விஜயன், மாவட்ட துணை செயலாளர் ராஜாமணி, பேரூராட்சி தலைவர் சேக்சிக்கந்தர் பாட்சா, நகர செயலாளர் ராஜ்மோகன், வடக்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி முன்னிலை வகித்தனர்.

பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்துகுமார்சாமி, மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் சுந்தரமூர்த்தி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இப்ரில் ஆசித், சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ராஜகோபால்,மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சிவா கலந்து கொண்டனர்.

Advertisement