சேதமான ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்தை அகற்ற வேண்டுகோள்

செய்யூர்:செய்யூர் அருகே இரும்பேடு ஊராட்சியில் 800க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழுதடைந்த கட்டடத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் செயல்பட்டு வந்தது.

இந்த கட்டடத்தில் அடிப்படை வசதிகள் இல்லை. கிராம சபை கூட்டம், மன்ற கூட்டங்கள் உள்ளிட்டவை நடத்தவும், சேவைக்காக வரும் பொதுமக்கள் அமரவும் போதிய இடவசதி இல்லாமல் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் சிரமப்பட்டு வந்த நிலையில், வேறு கட்டடத்திற்கு ஊராட்சி மன்றம் மாற்றப்பட்டு தற்போது செயல்படுகிறது.

குடியிருப்புப் பகுதியில் பயன்பாடு இல்லாத பழுதடைந்த ஊராட்சி மன்ற கட்டடத்தில் விஷப்பூச்சிகளின் நடமாட்டம் உள்ளது. மேலும் கட்டடம் இடிந்து விபத்து ஏற்படுவதற்கு முன் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் பழுதடைந்த ஊராட்சி மன்ற கட்டடத்தை இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் எதிர்பார்கின்றனர்.

Advertisement