ரயிலில் தவறவிட்ட நகை பயணியிடம் ஒப்படைப்பு
சென்னை : விரைவு ரயிலில் பயணி தவற விட்ட, 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளை மீட்ட ரயில்வே பாதுகாப்பு படையினர், உரியவரிடம் ஒப்படைத்தனர்.
சென்னை ரயில்வே பாதுகாப்பு படை ஆணையர் ராமகிருஷ்ணன் உத்தரவுப்படி, இன்ஸ்பெக்டர் செபாஸ்டியன் தலைமையிலான படையினர், பொதிகை அதிவிரைவு ரயிலில், விழுப்புரம் முதல் எழும்பூர் வரை நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
எழும்பூர் வந்த பின், பயணியர் அனைவரும் இறங்கி சென்ற பின், பெட்டிகளில் சோதனை நடத்தினர். அப்போது, பை ஒன்றை கைப்பற்றி, ஸ்டேஷன் மாஸ்டர் முன்னிலையில் பிரித்து பார்த்தனர். அதில், 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, ஏழு சவரன் நகை மற்றும் பொருட்கள் இருந்தன.
இதற்கிடையே, விருதுநகரை சேர்ந்த சக்தி சுந்தர் என்பவர், தன் பையை தவறவிட்டுள்ளதாக, ரயில்வே செயலியில் புகார் தெரிவித்திருந்தார்.
தென்காசியில் இருந்து தாம்பரத்திற்கு பயணம் செய்ததாகவும், பையை மறந்து, தாம்பரம் நிலையத்தில் இறங்கி விட்டதாகவும் தெரிவித்தார்.
அவரை எழும்பூர் அலுவலகத்திற்கு வர வழைத்து, ரயில்வே பாதுகாப்பு படையினர், அவருடைய டிக்கெட் உள்ளிட்ட ஆவணங்களை சரிபார்த்து, நகைப் பையை அவரிடம் ஒப்படைத்தனர்.
மேலும்
-
இந்தியா-பாகிஸ்தான் மோதல்; மே 19ல் பார்லி., குழுவிடம் விளக்கம் அளிக்கிறார் விக்ரம் மிஸ்ரி!
-
தங்கம் விலை நேற்று ரூ.2,360 சரிவு; இன்று சவரனுக்கு ரூ.120 உயர்வு!
-
" நீங்கள் எங்க ஹீரோ அங்கிள் " - பிரதமருக்கு நன்றி சொன்ன இமாம் பேரன்
-
பார்லி சிறப்புக் கூட்டம் தேவையில்லை; காங்கிரஸ் கோரிக்கைக்கு சரத்பவார் கடும் எதிர்ப்பு
-
இந்தோனேசியாவில் வெடிகுண்டு வெடித்து 13 பேர் பலி
-
பஞ்சாபில் கள்ளச்சாராயம் குடித்த 14 பேர் பலி; 6 பேர் கவலைக்கிடம்