பல்கலை., சமுதாய கல்லுாரி மாணவர்கள் களப்பயணம்

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழக சமுதாய கல்லுாரி உயிர்வேதியியல் துறை மாணவர்கள் சிருஷ்டி பவுண்டேஷன் ஆட்டிசம் பயிற்சி நிறுவனத்திற்கு களப்பயணம் மேற்கொண்டனர்.

நிகழ்ச்சியில் கல்லுாரி முதல்வர் (பொ)லலிதா ராமகிருஷ்ணன் வரவேற்றார். இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி புதுச்சேரி சேர்மேன் லட்சுமிபதி, பொருளாளர் பாஸ்கரன், நிர்வாகக் குழு உறுப்பினர் அய்யனார், ஒருங்கிணைப்பாளர் அருண் நாகலிங்கம் முன்னிலை வகித்தனர்.

சிருஷ்டி அறக்கட்டளை தலைவர் கார்த்திக், உதவிப் பேராசிரியர்கள்வரலட்சுமி, தாரகேஸ்வரி வாழ்த்துரை வழங்கினர்.

பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்பிரகாஷ் பாபு, அறக்கட்டளையைப் பார்வையிட்டு, ஆட்டிசம் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.ஏற்பாடுகளை இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி செய்திருந்தனர்.

Advertisement