கள்ளக்குறிச்சியில் சர்வீஸ் சாலை பணிகள் தீவிரம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி புறவழிச்சாலையில் உள்ள இரு மேம்பாலங்களையொட்டி ரூ.10 கோடி மதிப்பில் 'சர்வீஸ் சாலைகள் அமைக்கும் பணிகள் தீவிரம் அடைந்துள்ளன.
உளுந்துார்பேட்டை-சேலம் சாலை, நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டு கடந்த, 2013ம் ஆண்டு முதல் போக்குவரத்து உள்ளது.
உளுந்துார்பேட்டை, எலவனாசூர்கோட்டை, தியாகதுருகம், கள்ளக்குறிச்சி, சின்னசேலம், ஆத்துார், வாழப்பாடி, உடையாப்பட்டி ஆகிய, 8 இடங்களில் புறவழிச்சாலை அமைக்கப்பட்டது. போக்குவரத்து குறைவால், புறவழிச் சாலைகள் அனைத்தும் இருவழிச் சாலையாக அமைக்கப்பட்டன.
கடந்த சில ஆண்டுகளாக உளுந்துார்பேட்டை- சேலம் சாலையில் போக்குவரத்து அதிகரிப்பால், புறவழிச் சாலைகளில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டன.
இரு வழிச்சாலை இருந்ததால் விபத்து ஏற்பட்டது. அதையடுத்து ஏற்பட்டதால், படிப்படியாக அனைத்து புறவழி சாலைகளும், நான்கு வழி சாலைகளாக மாற்றப்பட்டன.
கள்ளக்குறிச்சி புறவழிச் சாலையில் தென்கீரனுார், ஏமப்பேர் சாலையின் குறுக்கே இரண்டு மேம்பாலங்கள் உள்ளன. அதில் தென்கீரனுார் மேம்பாலம் பகுதியில் புறவழிச் சாலையை இணைக்கும் வகையில் வலதுபுறம் மட்டும் மண்சாலை இருந்தது.
அந்த வழியாக நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
ஏமப்பேர் மேம்பாலத்தையொட்டி, இரு புறமும் சாலை வசதியின்றி காணப்பட்டது.நான்கு வழிச் சாலையாக மாற்றப்பட்ட நிலையில், இரு மேம்பாலங்களிலும் 'சர்வீஸ் சாலை' இல்லாததால், நீண்ட துாரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் உள்ளிட்டோர், கடும் அவதிக்குள்ளாகினர்.
இரு மேம்பாலங்களிலும் சாலையின் இருபுறமும் சர்வீஸ் சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து தற்போது, 10 கோடி ரூபாய் மதிப்பில் 'சர்வீஸ் சாலை' அமைக்கும் பணிகள் துவங்கி உள்ளது.
முதற்கட்டமாக சாலையின் இருபுறமும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, லாரிகள் மூலம் மணல் கொட்டப்பட்டு வருகிறது.
தற்போது, சர்வீஸ் சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
பணிகளை விரைந்து முடிந்து, சர்வீஸ் சாலையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும்
-
ஏர்டெல் சேவை பாதிப்பு: பயனர்கள் அவதி
-
பாக்., தூதரக அதிகாரி நாட்டை விட்டு வெளியேற மத்திய அரசு 24 மணி நேரம் கெடு
-
முதுமலை யானைகள் முகாமில் விழா; ரூ.13 கோடி திட்டங்களை துவக்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்!
-
தூய்மைப் பணியாளர்களுக்கான திட்டத்தில் முறைகேடு: சி.பி.ஐ., விசாரணை கோரி சவுக்கு சங்கர் வழக்கு
-
பாகிஸ்தானை ஆதரித்த துருக்கி, அஜர்பைஜானை புறக்கணிக்க வேண்டும்; இணையத்தில் டிரெண்டிங்
-
அரசு நிதியில் ரூ.80 லட்சம் மோசடி: ஒடிசாவில் 5 வனத்துறை அதிகாரிகள் கைது