பெருமாள் கோவில் தேர் திருவிழா
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் தேர் திருவிழா இன்று நடக்கிறது.
கள்ளக்குறிச்சி புண்டரீக வள்ளி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில், கடந்த 3ம் தேதி திருவிழா துவங்கியது.
தொடர்ந்து, நாள்தோறும் மூலவர் மற்றும் உற்சவர்களுக்கு, சிறப்பு பூஜை மற்றும் அபிேஷகம் நடந்தது.
மாலையில் உற்சவர் சுவாமியை பல்வேறு வாகனங்களில் எழுந்தருள செய்து, வீதியுலா நடைபெற்றது. இந்நிலையில் கடந்த, 10ம் தேதி சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
இதைத்தொடர்ந்து, இன்று அதிகாலை 4:30 மணிக்கு, தேர் திருவிழா நடைபெறுகிறது. கோவிலில் இருந்து மந்தைவெளி பகுதி வரை திருத்தேரை பக்தர்கள் வடம்பிடித்து இழுத்து செல்ல உள்ளனர்.
தொடர்ந்து, காலை 9:30 மணிக்கு, மந்தைவெளி பகுதியில் இருந்து காந்திரோடு, நான்குமுனை சந்திப்பு, சேலம் சாலை மற்றும் கவரைத்தெரு வழியாக தேரோட்டம் நடக்க உள்ளது.
மேலும்
-
ஏர்டெல் சேவை பாதிப்பு: பயனர்கள் அவதி
-
பாக்., தூதரக அதிகாரி நாட்டை விட்டு வெளியேற மத்திய அரசு 24 மணி நேரம் கெடு
-
முதுமலை யானைகள் முகாமில் விழா; ரூ.13 கோடி திட்டங்களை துவக்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்!
-
தூய்மைப் பணியாளர்களுக்கான திட்டத்தில் முறைகேடு: சி.பி.ஐ., விசாரணை கோரி சவுக்கு சங்கர் வழக்கு
-
பாகிஸ்தானை ஆதரித்த துருக்கி, அஜர்பைஜானை புறக்கணிக்க வேண்டும்; இணையத்தில் டிரெண்டிங்
-
அரசு நிதியில் ரூ.80 லட்சம் மோசடி: ஒடிசாவில் 5 வனத்துறை அதிகாரிகள் கைது