சிலிண்டர் வந்துள்ளதாக கூறி 18 பேரிடம் பணம் மோசடி செய்த வாலிபர் கைது

கிருஷ்ணகிரி: சிலிண்டர் போட வந்ததாக கூறி, 18 பேரிடம் நுாதன முறையில் பண மோசடி செய்த வாலிபரை, சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரியை சேர்ந்த மணிகண்டன், தனியார் மருத்துவம-னையில் டாக்டராக பணிபுரிகிறார். கடந்த சில நாட்களுக்கு முன், அவரது மொபைல் போனுக்கு ஒரு அழைப்பு வந்தது.
அதில் போனில் பேசிய நபர், தான் சிலிண்டர் வினியோகம் செய்-பவர் என்றும், உங்கள் வீட்டிற்கு சிலிண்டர் வந்துள்ளது. அதற்-கான தொகையை கூகுள்பே மூலம் அனுப்புங்கள் என கூறினார். அதை நம்பி மணிகண்டனும் அனுப்பினார். ஆனால் மணி-கண்டன் வீட்டிற்கு எந்த சிலிண்டரும் வரவில்லை. கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் பிரிவு போலீசில் மணிகண்டன் புகார் செய்தார்.
இது குறித்து விசாரிக்க ஏ.டி.எஸ்.பி., நமச்சிவாயம் உத்தர-விட்டார். விசாரணையில், மணிகண்டன் ஜி.பே., மூலம் தொகை அனுப்பப்பட்ட எண், கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த பெரிய பனமுட்லுவை சேர்ந்த பெருமாள், 24, உடையது என தெரிந்தது.
அவர், இதேபோல தர்மபுரி, சேலம், திருச்சி உள்பட பல பகுதி-களில், 18-க்கும் மேற்பட்டவர்களிடம் சிலிண்டர் பாய் என கூறி, பணத்தை நுாதன முறையில் பெற்றதும் தெரிந்தது.
இதையடுத்து, பெருமாளை போலீசார் கைது செய்தனர்.

Advertisement