ஹிந்து முன்னணி கூட்டம்

ஈரோடு: ஹிந்து முன்னணி சார்பில், முருக பக்தர்கள் மாநாடு, மது-ரையில் ஜூன், 22ல் நடக்கிறது. இதற்கான ஆயத்த பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம், ஈரோடு மாநகர் மாவட்டத்தில் திண்டல், சூரம்பட்டி நகர் சார்பில் வேல் வழிபாடு, பொதுக்குழு நடந்தது. மாவட்ட செயலாளர் வக்கீல் முரளி தலைமை வகித்தார்.


சிறப்பு அழைப்பாளராக கோபால் பங்கேற்றார். சூரம்பட்டி, திண்டல் நகர் சார்பில், 150க்கும் மேற்பட்ட வாகனங்களில் மாநாட்டுக்கு செல்ல முடிவு செய்தனர்.

Advertisement