ஜோய்ஆலுக்காஸ் வழங்கும் 'கோல்டு எக்ஸ்சேஞ் மேளா'
சென்னை:ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம், வாடிக்கையாளர்களுக்கு அபரிமிதமான மதிப்பை வழங்கும், சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. இச்சலுகையை, வரும், 25ம் தேதி வரை, வாடிக்கையாளர்கள் பெறலாம்.
இந்த சலுகையின் கீழ், வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய தங்கத்தை மாற்றி, புதிய தங்க நகைகள் வாங்கும்போது, பழைய தங்கத்துக்கு கிராமுக்கு, 100 ரூபாய் கூடுதலாக பெறலாம். பழைய நகைகளை மேம்படுத்தவோ, ஈடு இணையற்ற சேமிப்புகளுடன், காலத்தால் அழியாத அழகிய வடிவமைப்புகளில் முதலீடு செய்யவோ, இது ஒரு வாய்ப்பாக அமைகிறது.
இதுகுறித்து, ஜோய்ஆலுக்காஸ் குழுமத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான ஜோய் ஆலுக்காஸ் கூறியதாவது:
எங்கள் வாடிக்கையாளர்களுக்கு, எப்போதும் சிறந்த மதிப்பை வழங்க உறுதி பூண்டுள்ளோம். இந்த விசேஷமான சலுகை, அவர்கள் வாங்கும் நகைகளில், அதிகபட்ச பலனை பெற உதவும். வாடிக்கையாளர்கள் பழைய தங்கத்தை கொண்டு வந்து, புதிய நவீன மற்றும் அதிக மதிப்புமிக்க அழகான நகைகளை மாற்றிட, இதுவே சிறந்த தருணம்.
இவ்வாறு அவர் கூறினார்.