கலை பயிற்சி முகாம் நிறைவு

நாமக்கல்: நாமக்கல் ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில் கலை பயிற்சி முகாம் கடந்த, 1ல் துவங்கியது. அதில், பரத நாட்டியம், கிராமிய நடனம், ஓவியம், கைவினை, யோகா, சிலம்பம், கராத்தே போன்ற நுண்கலை பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சி முகாமில், சிறப்பாக பங்கேற்கும் குழந்தைகளை தேர்வு செய்து, மாநில, தேசிய அளவிலான கலை பயிற்சி முகாமிற்கு, அரசு சார்பில் அனுப்பி வைக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.


அதன் நிறைவு விழா, நேற்று முன்தினம் நடந்தது. கோட்டை துவக்கப்பள்ளி தலைமையாசிரியர் நிர்மலா தலைமை வகித்தார். ஜவகர் சிறுவர் மன்ற கிராமிய நடன ஆசிரியர் பாண்டியராஜன் வரவேற்றார். திட்ட அலுவலர் தில்லை சிவக்குமார், முகாம் திட்ட விளக்க உரையாற்றினார். நாமக்கல் மாவட்ட மைய நுாலக முதல்நிலை நுாலகர் சக்திவேல், மனவள கலை மன்ற பேராசிரியர் உழவன் தங்கவேல் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று, சான்றிதழ் வழங்கினர்.
முகாமில், சிறப்பாக பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தி, தேர்வு செய்யப்பட்ட, 5 பேர், வரும், 12 முதல், 19 வரை ஏற்காட்டில் நடக்கும் மாநில கலை பயிற்சி முகாமில் பங்கேற்கின்றனர்.

Advertisement