தமிழக அரசு சாதனை திட்டங்களை பிற மாநிலங்கள் பின்பற்றுகிறது லட்சுமணன் எம்.எல்.ஏ., பெருமிதம்

விழுப்புரம், : விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில், தமிழக அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம் கோலியனுார் தெற்கு ஒன்றியம் காவணிப்பாக்கத்தில் நடந்தது.

மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., சிறப்புரையாற்றி பேசியதாவது: முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., அரசு, கடந்த 4 ஆண்டில் மக்களுக்கு தேவையான பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. மகளிர் உரிமை தொகை, இலவச பஸ் பயணம், காலை உணவு திட்டம் உள்ளிட்ட ஏராளமாக பட்டியல் போடலாம். தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வராக ஸ்டாலின் உள்ளார்.

தமிழக அரசின் சாதனை திட்டங்களை, பிற மாநிலங்கள் பின்பற்றி செயல்படுத்துகிறது. இந்தியாவிற்கு முன்னாடி மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது.

வரும் 2026 சட்டசபை தேர்தலில் 200 தொகுதிகளுக்கும் அதிகமாக தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும். விழுப்புரம் மத்திய மாவட்டத்தில் உள்ள 2 தொகுதிகளில் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கான பணிகளை நாம் மேற்கொள்ள வேண்டும் என பேசினார்.

தலைமை கழக பேச்சாளர் சையத்ஹபிஸ், முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், ஒன்றிய செயலாளர் முருகவேல், வழக்கறிஞர் அணி சுவைசுரேஷ், கோலியனூர் ஒன்றிய சேர்மன் சச்சிதானந்தம், பொதுக்குழு உறுப்பினர் சம்பத், மாவட்ட பொறியாளர் அணி செல்வகுமார், மாவட்ட கவுன்சிலர்கள் கேசவன், அரிராமன், மாவட்ட இளைஞரணி தினகரன் முன்னிலை வகித்தனர்.

வழக்கறிஞரணி விஸ்வநாதன், மாவட்ட மகளிரணி செல்வி, ஒன்றிய நிர்வாகிகள் தேவகிருஷ்ணன், கண்ணப்பன், கிருஷ்ணன், கலியமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி, வீரா ஏழுமலை, பிரபு, பாலாஜி, ராஜமேரி, வீரபத்திரன், காசிநாதன், முருகன், சடகோபன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement