திருவிழா நிறைவால் வெறிச்சோடிய கடைவீதி

நாமகிரிப்பேட்டை,: நாமகிரிப்பேட்டை மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த, 20 நாட்களுக்கு முன் தொடங்கியது. கோவிலில் கம்பம் நட்ட பின் பெண்கள், குழந்தைகள் தினமும் கம்பத்திற்கு காலை, மாலை தண்ணீர் ஊற்றி வழிபட்டு சென்றனர்.

அதுமட்டுமின்றி கோவிலை சுற்றி நிழலுக்கு பந்தலும் அமைக்கப்பட்டிருந்தது. கடந்த வாரம் தேர் திருவிழா நடந்ததால் கடைவீதியில் பொம்மை, வளையல், அப்பளம் உள்ளிட்ட பல்வேறு கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. தேர் திருவிழா முடிந்ததும் கம்பமும் அகற்றப்பட்டது. இதனால், மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்தது. நேற்று, ஞாயிற்றுக்கிழமை என்பதால் அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. வெயில் தாக்கம் அதிகமாக இருந்ததால், நேற்று மதியம் நாமகிரிப்பேட்டை கடைவீதி மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

Advertisement