போதையில் நண்பனை கொன்ற இருவர் கைது

அம்ருதஹள்ளி: பெங்களூரில் பார்ட்டியின்போது ஏற்பட்ட தகராறில், பெயின்டரை கொன்ற இரு நண்பர்கள் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரு, அம்ருதஹள்ளியை சேர்ந்தவர்கள் வீரமணி, பவன், அஜிஸ். மூவரும் பெயின்ட் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். மே 8ம் தேதி இரவு தாசரஹள்ளி பிரதான சாலையில் உள்ள காலி இடத்தில் மூவரும் மது அருந்தி உள்ளனர்.
போதையில் அஜிசுக்கும், பவனுக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டு, பவனை அஜிஸ் தாக்கினார். கோபமடைந்த வீரமணி, பவன் இருவரும் சேர்ந்து அங்கு கீழே கிடந்த மரக்கட்டையால் அஜிசை கடுமையாக தாக்கினர்.
கீழே விழுந்த அவரை, விபத்தில் காயம் ஏற்பட்டதாக கூறி, அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மறுநாள் மே 9ம் தேதி தீவிர சிகிச்சைக்காக நிமான்ஸ் மருத்துவமனைக்கு அஜிசை அனுப்பி வைத்தனர்.
அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் அடிப்படையில், அம்ருதஹள்ளி போலீசார், நிமான்ஸ் மருத்துவமனைக்கு சென்றனர். நிமான்ஸ் டாக்டர்கள் அஜிசுக்கு ஏற்பட்ட காயத்தில் சந்தேகம் உள்ளதை போலீசிடம் தெரிவித்தனர். அங்கிருந்த வீரமணி, பவனை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
அவர்களிடம் விசாரித்தபோது, உண்மையை ஒப்புக் கொண்டனர். மூன்று நாள் தொடர்ந்து சிகிச்சை அளித்தும், அஜிஸ் உயிரிழந்தார். வழக்குப் பதிவு செய்த போலீசார், இருவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
மேலும்
-
'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கை சிறப்பாக இருந்தது: ஊட்டியில் முதல்வர் ஸ்டாலின் பேட்டி
-
ஊட்டியில் மலர் கண்காட்சி இன்று துவக்கம்
-
6,000 பேர் பணி நீக்கம்: மைக்ரோசாப்ட் அதிரடி
-
பாதாள சாக்கடை, குடிநீர் இணைப்புக்கான மக்களை 'பதம் பார்க்கும்' தீர்மானம்! வைப்புத்தொகை, மாத கட்டணம் உயர்கிறது; தி.மு.க., கூட்டணி கவுன்சிலர்கள் 'கப் - சிப்'
-
பெண்ணிடம் நான்கரை சவரன் நகை பறிப்பு
-
தமிழகத்தில் நான்கரை மாதங்களில் நாய்க்கடியால் 2.16 லட்சம் பேர் பாதிப்பு