போர் நிறுத்தம் எதிரொலி; இந்திய வீரரை ஒப்படைத்தது பாகிஸ்தான்!

புதுடில்லி: பாகிஸ்தான் படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய எல்லைப் பாதுகாப்பு படை (பி.எஸ்.எப்.,) வீரர் பூர்ணம் குமார் ஷா, இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார் என எல்லை பாதுகாப்பு படை அறிவித்துள்ளது.
நம் நாட்டின் எல்லை பாதுகாப்புப் படையில், கான்ஸ்டபிளாக பணிபுரிபவர் பூர்ணம் குமார் ஷா. இவர் பஞ்சாபின் பெரோஸ்பூரில், இந்திய - பாக்., எல்லையில் பணிபுரிந்து வருகிறார்.
இவரை கடந்த 20 நாட்களுக்கு முன்பு, இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர் பதற்றம் சூழல் நிலவிய போது பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் கைது செய்தனர்.
இவர், ஏப்ரல் 23ம் தேதி தவறுதலாக பாகிஸ்தான் எல்லையில் உள்ள ஜலோக் தோனா பகுதிக்குச் சென்ற போது, அந்நாட்டு ராணுவத்தால் கைது செய்யப்பட்டார். தற்போது இந்தியா, பாகிஸ்தான் இடையே நிலவி வந்த மோதல் முடிவுக்கு வந்து, போர் நிறுத்தமும் அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில் இந்தியா கோரிக்கையை ஏற்று, இன்று (மே 14) காலை 10.30 மணிக்கு அட்டாரி-வாகா எல்லை வழியாக அழைத்து வந்து பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
இந்த தகவலை எல்லையோர பாதுகாப்பு படை அதிகாரிகள் உறுதி செய்தனர். ஏப்ரல் 23ம் தேதி கைது செய்யப்பட்ட பூர்ணம் குமார் ஷா, 20 நாட்களுக்கு பிறகு இன்று விடுவிக்கப்பட்டுள்ளார்.




மேலும்
-
'ஆபரேஷன் சிந்தூர்' வெற்றி; ஜனாதிபதி திரவுபதி முர்மு உடன் முப்படை தளபதிகள் சந்திப்பு
-
சீனாவின் 'குளோபல் டைம்ஸ்' எக்ஸ் கணக்கு இந்தியாவில் முடக்கம்
-
பஹல்காம் வேட்டையின் அடுத்த இலக்கு: தேடப்படும் 11 பயங்கரவாதிகள் இவர்கள்தான்!
-
டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் கூடியது அமைச்சரவைக் குழு கூட்டம்!
-
10ம் வகுப்பு தேர்வு ரிசல்ட் தேதி மாற்றம்; முன் கூட்டியே மே 16ல் வெளியாகுகிறது!
-
திருச்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை