மாநில அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்று பி.ஆர்.ஜி., பள்ளி சாதனை

நெய்க்காரப்பட்டி: பழநி, நெய்க்காரப்பட்டியில் செயல்பட்டு வரும் பி.ஆர்.ஜி., வேலப்ப நாயுடு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தேர்வில் அறிவியல் பாடப் பிரிவில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

பழநி நெய்க்காரப்பட்டியில் பி.ஆர்.ஜி வேலப்ப நாயுடு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் இப்பள்ளியைச் சேர்ந்த ஹரிபிரசாத், அறிவியல் பாடப் பிரிவில் 600க்கு 597 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் சாதனை படைத்துள்ளார். வேதியல், கணினி அறிவியல், கணிதத்தில் 100 மதிப்பெண்களும் தமிழ், ஆங்கிலம், இயற்பியலில் 99 மதிப்பெண்களும் பெற்றுள்ளார். மாணவி பிரியா, 600க்கு 591, சுஜித், 600க்கு 588 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இப்பள்ளியில் 500 மதிப்பெண்களுக்கு மேல் 75 மாணவர்களும், கணிதத்தில் 5, கணினி அறிவியல் 7 வணிகவியல் 2, பொருளியல் 2, கணக்கியல் 4, கணினி பயன்பாடு 5 பேர் என 100 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். மாணவர்களை பள்ளி தாளாளர் ரஞ்சிதம், செயலர் கிரிநாத், நிர்வாக அதிகாரி பவிதா, நிர்வாக குழு உறுப்பினர் ராஜ்மோகன் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.

Advertisement