சித்ரா பவுர்ணமிக்கு வள்ளி கும்மியாட்டம்

வேடசந்தூர்:நாகம்பட்டி ஊராட்சி குன்னம்பட்டியில் உள்ள ஸ்ரீ வீரதிம்மம்மாள் தசிரிவார் குல பங்காளிகள் கோயிலில், சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு தீர்த்தக் காவடி மற்றும் பால்காவடி எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக சென்று தரிசனம் செய்தனர்.

குன்னம்பட்டி, நாகம்பட்டி காக்காதோப்பூர் தம்மனம்பட்டி, விட்டல்நாயக்கன்பட்டி, திப்பம்பட்டி உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட குக்கிராமங்களைச் சேர்ந்த மக்கள், வேடசந்தூர் அய்யனார் கோயிலில் தப்பாட்டம், காவடி ஆட்டத்துடன் ஊர்வலமாக புறப்பட்டனர். அப்போது தசரிவார் குல பெண்களின் வள்ளி கும்மியாட்டம் நடந்தது. இன்று காலை கோயிலில் தீர்த்தம் தெளித்து, சிறப்பு பூஜை செய்து வழிபட உள்ளனர்.

Advertisement