அ.தி.மு.க., சார்பில் அன்னதானம் வழங்கல்

திண்டுக்கல்: அ.தி.மு.க. சார்பில் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் விழா இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்பட இருக்கிறது. இதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

அதன்படி திண்டுக்கல்லில், மேற்கு மாவட்ட ஜெ., பேரவை சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை முன்பு நடந்தது. மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் பாரதிமுருகன் தலைமை வகித்தனர். முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு பொதுமக்களுக்கு இனிப்பு, சிக்கன் பிரியாணி வழங்கி அன்னதானத்தை தொடங்கி வைத்தனர். அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் மருதராஜ், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் ராஜ்மோகன், இளைஞரணி செயலாளர் வி.டி.ராஜன், மகளிரணி மாவட்ட செயலாளர் ஜெயலட்சுமி, பகுதி செயலாளர்கள் மோகன், சேசு, சுப்பிரமணி, பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன் உள்பட பலர் பங்கேற்றனர்.

நத்தம்: பஸ் ஸ்டாண்ட் முன்பாக அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் தொடங்கி வைத்தார். மாநில ஜெ., பேரவை இணை செயலாளர் கண்ணன் கலந்து கொண்டனர்.

Advertisement