திருச்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை

திருச்சி: திருச்சியில் கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

திருச்சி மேல கல்கண்டார் கோட்டை, மூகாம்பிகை நகர், மேகலா தியேட்டர் எதிர்புறம் துணிக்கடை முன்பு அலெக்ஸ் நடத்தி வந்தார். இவருடைய மனைவி விக்டோரியா. இவர் ரயில்வே ஊழியர். இவர்களுக்கு ஆராதனா,9, மற்றும் ஆலியா,3, ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர்.

நேற்று இரவு வீட்டில் கணவன், மனைவி இருவரும் தூக்கு மாட்டிக்கொண்டும் அவரது இரு பெண் பிள்ளைகளுக்கு மருந்து கொடுத்தும் தற்கொலை செய்து கொண்டனர். கடன் தொல்லை காரணமாக இந்த தற்கொலை சம்பவம் நடந்துள்ளது என போலீசார் தெரிவித்தனர்.

Advertisement