எல்லை கருப்பராயசாமி கோவிலில் தமிழக கவர்னர் ரவி வழிபாடு

பெ.நா.பாளையம் : கோவையில் உள்ள எல்லை கருப்பராயசாமி கோவில் வளாகத்தில் உள்ள சித்தக் கோவிலில், தமிழக கவர்னர் ரவி வழிபாடு நடத்தினார்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் ரோடு, பிளிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட ஒன்னிபாளையத்தில் எல்லை கருப்பராயசாமி கோவில் உள்ளது. கோவில் வளாகத்தில் பதினெட்டு சித்தர்களை உள்ளடக்கிய சித்த கோவில் அமைக்கப்பட்டுள்ளது.
சித்ரா பவுர்ணமி நிகழ்வை ஒட்டி, நேற்று தமிழக கவர்னர் ரவி, சித்தக் கோவிலில் நடந்த மங்கள வழிபாடு நிகழ்ச்சிக்கு வந்தார். கோவில் நிர்வாகி விஞ்ஞானி ஜெயபிரபு வரவேற்றார். வழிபாடு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சித்தர்களை வழிபட்டார்.
முன்னதாக, எல்லை கருப்பராயசாமி கோவில் மற்றும் சிவன், பார்வதி சன்னதியில் கவர்னர் ரவி வழிபாடு செய்தார். விழாவில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் முன்னாள் தேசிய பொதுச்செயலாளர் சுரேஷ் பையாஜி பங்கேற்று, சிறப்பு பூஜை மற்றும் மங்கள வழிபாடு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். விழாவில், நடிகை மீனா, திரைப்பட நடன இயக்குனர் கலா, தமிழக அரசு அதிகாரிகள் உட்பட திரளான மக்கள் பங்கேற்றனர்.

மேலும்
-
'ஆபரேஷன் சிந்தூர்' வெற்றி; ஜனாதிபதி திரவுபதி முர்மு உடன் முப்படை தளபதிகள் சந்திப்பு
-
சீனாவின் 'குளோபல் டைம்ஸ்' எக்ஸ் கணக்கு இந்தியாவில் முடக்கம்
-
பஹல்காம் வேட்டையின் அடுத்த இலக்கு: தேடப்படும் 11 பயங்கரவாதிகள் இவர்கள்தான்!
-
டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் கூடியது அமைச்சரவைக் குழு கூட்டம்!
-
போர் நிறுத்தம் எதிரொலி; இந்திய வீரரை ஒப்படைத்தது பாகிஸ்தான்!
-
10ம் வகுப்பு தேர்வு ரிசல்ட் தேதி மாற்றம்; முன் கூட்டியே மே 16ல் வெளியாகுகிறது!