ராமேஸ்வரம் கோவிலில் ஓ.பி.எஸ்., ருத்ர பூஜை

1

ராமேஸ்வரம் : ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ருத்ர பூஜை செய்து வழிபட்டார்.

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், தன் தாய், மனைவி இருவரின் ஆன்மா சாந்தியடைய வேண்டி சில நாட்களுக்கு முன் ராமேஸ்வரம் கோவிலில் புனித நீராடி தரிசனம் செய்தார். மேலும் கோவிலில் இருந்து புனித தீர்த்தத்தை எடுத்துக்கொண்டு காசிக்கு சென்றார். அங்கு சுவாமிக்கு புனித தீர்த்தத்தை அபிஷேகம் செய்து தரிசனம் செய்து புனித கங்கை நீரை எடுத்துக் கொண்டு நேற்று ராமேஸ்வரம் கோவிலுக்கு வந்தார்.

சுவாமி சன்னதி அருகில் தீமைகள் விலகி, நன்மைகள் கிடைத்திட வேண்டி ருத்ர அபிஷேக பூஜை செய்தார். மகன் ஜெயபிரதீப், உறவினர்கள் வந்திருந்தனர்.

Advertisement