ஆப்ரிக்காவில் கனமழையால் 62 பேர் பலி; மாயமான 50 பேரை தேடும் பணி தீவிரம்

கின்ஷாசா: ஆப்ரிக்க நாடான காங்கோ ஜனநாயக குடியரசில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி 62 பேர் உயிரிழந்தனர். மேலும் மாயமான 50 பேரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோ ஜனநாயக குடியரசில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. கிழக்கு மாகாணமான கிவுவில் மழை வெளுத்து வருகிறது. இதன் காரணமாக, நங்கன்ஜா நகரில் உள்ள டாங்கன்யிகா உள்பட பல ஏரிகள் நிரம்பியது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி பலர் அடித்து செல்லப்பட்டனர்.


இதுவரை வெள்ளப்பெருக்கில் சிக்கி 62 பேர் உயிரிழந்தனர். மேலும் 50 பேர் மாயமாகினர். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. வெள்ளப்பெருக்கு காரணமாக, மின்சாரம் மற்றும் தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.
வாசகர் கருத்து (1)
Nada Rajan - TIRUNELVELI,இந்தியா
12 மே,2025 - 12:44 Report Abuse

0
0
Reply
மேலும்
-
மருத்துவ கழிவு கொட்டுவதை தடுக்க நீர்நிலைகளில் தீவிர கண்காணிப்பு தாம்பரம் மாநகராட்சி அறிக்கை
-
மூன்று மாதத்தில் 2,200 பேருக்கு திருத்தணியில் வீட்டுமனை பட்டா
-
வரும் 18ல் கோவையில் மாநில மகளிர் மாநாடு
-
அனுமதியின்றி பேனர் தடுத்து நிறுத்திய அதிகாரிகள்
-
விளம்பர விருப்பம் படம் மற்றும் புட்நோட்
-
தொழில் வாய்ப்புகளை வாரி வழங்கும் 'சப்கான் 2025' கண்காட்சி துவக்கம்
Advertisement
Advertisement