மருத்துவ கழிவு கொட்டுவதை தடுக்க நீர்நிலைகளில் தீவிர கண்காணிப்பு தாம்பரம் மாநகராட்சி அறிக்கை
சென்னை, சென்னை, பல்லாவரம் ஏரிக்கரை மற்றும் அதையொட்டிய காலியிடங்களில், கடந்த 2024 செப்., 24ம் தேதி அதிகாலை, லாரிகளில் எடுத்து வரப்பட்ட மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டிருப்பது குறித்து, செப்., 25ல் நம் நாளிதழில் செய்தி வெளியானது.
அதன் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்குப்பதிந்து விசாரித்த தீர்ப்பாயம், 'மருத்துவ கழிவுகளை கொட்டிய மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி இதுபோல நடக்காமல் தடுக்க வேண்டும்' என, தாம்பரம் மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிட்டது.
இந்த நிலையில் தீர்ப்பாயத்தில் தாம்பரம் மாநகராட்சி அளித்த அறிக்கை:
பல்லாவரம் ஏரிக்கரை மற்றும் சாலையோரங்களில் சட்ட விரோதமாக மருத்துவ கழிவுகளை கொட்டிய, இரண்டு தனியார் மருத்துவமனைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இப்பிரச்னையை, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு பரிந்துரைத்து, தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் உள்ள நீர்நிலைகள், சாலையோரங்களில் இனி மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. திடக்கழிவு மேலாண்மை பணிகளை பணியாளர்களும், ஒப்பந்த ஊழியர்கள் வாயிலாகவும் தாம்பரம் மாநகராட்சி செய்து வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
பட்டா கேட்டு முற்றுகை யிட்ட மக்கள்
-
குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலருக்கு மக்கள் தொடர்பு முகாமில் கலெக்டர் கண்டிப்பு - ரூ.90 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவி வழங்கல்
-
வீரபாண்டி சித்திரை திருவிழா ஊர் பொங்கலுடன் நிறைவு
-
டாக்டர் கார் மீது கல்வீச்சு
-
கொலை மிரட்டல்: மூவர் மீது வழக்கு
-
கட்டுமானப் பொறியாளர்கள் மனு