அனுமதியின்றி பேனர் தடுத்து நிறுத்திய அதிகாரிகள்

சென்னை, சென்னை மாநகராட்சிக்கு வருமானம் ஈட்டும் விதமாக, விபத்து ஏதும் நிகழாமல் இருக்கும் இடமாக ஒதுக்கப்பட்டு தனியார் நிறுவனங்கள் விளம்பரப்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டு வருகின்றன.
ஆனால், அனுமதி வழங்கப்படாத இடங்களிலும், பகுதிவாசிகள், வாகன ஓட்டிகளின் உயிரை காவு வாங்கும் வகையில் அந்தந்த பகுதி அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகளை 'கவனித்து' கொண்டு, பிரதான சாலையோரங்களில் பேனர்கள் வைக்கின்றனர்.
இது குறித்து, நம் நாளிதழில் அடிக்கடி செய்தி வெளியாகிறது. அந்நேரம் மட்டும், அதிகாரிகள் கண்துடைப்பிற்காக பேனரை அகற்றி வருகின்றனர். மீண்டும் அதே இடத்தில் பேனர்கள் வைக்கப்படுகின்றன.
இந்நிலையில், தேனாம்பேட்டை அண்ணாசாலை சிக்னல் அருகே உள்ள ஆனந்தா ஹோட்டல் மீது அனுமதியின்றி விளம்பர பேனர் அமைப்பதற்கான கட்டமைப்புகள் அமைக்கப்பட்டன.
இதையறிந்த மாநகராட்சி அதிகாரிகள், சம்பந்தப்பட்ட நபருக்கு நேற்று 'நோட்டீஸ்' வழங்கி உள்ளனர். ஓரிரு நாட்களில் பேனர் அமைப்பதற்கான கட்டமைப்பை, முழுதுமாக அகற்ற உத்தரவிட்டுள்ளனர்.
மேலும்
-
முதுகுளத்துார், கமுதியில் காற்றுடன் பலத்த மழை
-
சிறப்பாக பணிபுரிந்த எஸ்.ஐ., போலீசாருக்கு டி.ஐ.ஜி பாராட்டு
-
மண்வெட்டியால் சாதம் கிளறி பக்தர்களுக்கு அன்னதானம்
-
ராமேஸ்வரம் இ சேவை மையத்தில் தடாலடி வசூலால் மக்கள் பாதிப்பு
-
மங்களநாதர் சுவாமி களரி மண்டகப்படி
-
பரமக்குடி வைகை ஆற்றில் தசாவதார சேவையில் அழகர்: கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம்