பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

பொள்ளாச்சி, ; பொள்ளாச்சியில், அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி பிறந்த நாள் விழாவையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமியின், 71வது பிறந்த நாள் விழாவையொட்டி பொள்ளாச்சி நகர அ.தி.மு.க., சார்பில் பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவில், கரிவரதராஜப்பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது. மாவட்ட மாணவரணி சார்பில் லட்சுமி நரசிம்மர் கோவிலில் ஆயுஷ் ேஹாமம் நடந்தது.

நிகழ்ச்சிகளில், எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன், நகர செயலாளர் கிருஷ்ணகுமார், மாவட்ட மாணவரணி செயலாளர் ஜேம்ஸ்ராஜா, பொருளாளர் கனகு, மாவட்ட பிரதிநிதி அருணாச்சலம் பங்கேற்றனர்.

Advertisement