எம்.எம்.எஸ்., பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

பொள்ளாச்சி,; பொள்ளாச்சி ஆர்.கோபாலாபுரம் சுங்கம் எம்.எம்.எஸ்., பள்ளி, பிளஸ் 2 பொதுத்தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.மாணவி ஜேன் ஜோவினா, 586 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், சுவாதிகா, 579 மதிப்பெண்களுடன் இரண்டாமிடமும், பிரணவதர்ஷினி, 578 மதிப்பெண்களுடன் மூன்றாமிடமும் பெற்றனர்.

கணிதத்தில், பிரணவதர்ஷிஜி, வேதியியலில், ரிதன்யா; உயிரியலில், ரோஷினி ஆகியோர், 100 மதிப்பெண்கள் பெற்றனர்.கணினி அறிவியலில், பிரணவதர்ஷினி, செல்வதீபிகா, சுவாதிகா, முகம்மது சபி; கணினி பயன்பாடு பாடத்தில், மாணவர்கள் கிருபாவதி, கவுசிகா, ஆர். கவுசிகா, ராகவி ஆகியோர் 100 மதிப்பெண்கள் பெற்றனர்.

பிளஸ்2 பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பள்ளி தாளாளர் மனோகரன், செயலாளர் விஜயலட்சுமி, பள்ளி முதல்வர் கிரிஜா ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement