செஞ்சியில் தி.மு.க., பொதுக்கூட்டம்

செஞ்சி : செஞ்சியில் தி.மு.க., சார்பில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.

நகர அவைத் தலைவர் பார்சுதுரை தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சங்கர் ,செயல்மணி, சுமித்ரா சங்கர், நெடுஞ்செழியன், காளி சுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் கார்த்திக் வரவேற்றார்.

ஒன்றிய சேர்மன் விஜயகுமார், பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலி துவக்க உரை நிகழ்த்தினர். தலைமை கழக பேச்சாளர் லெனின், மாவட்ட செயலாளர் மஸ்தான் எம்.எல்.ஏ., சாதனைகளை விளக்கி பேசினர்.

முன்னாள் எம்.எல்.ஏ., செந்தமிழ்செல்வன், ஒன்றிய சேர்மன் அமுதா ரவிக்குமார், மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, துணை சேர்மன் ஜெயபாலன், விவசாய அணி கணேசன், ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, விஜயராகவன், பச்சையப்பன், நெடுஞ்செழியன், துரை, இளம்வழுதி, மணிமாறன், பொதுக்குழு உறுப்பினர் மணிவண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement