இருநாட்டு ராணுவ அதிகாரிகள் பேச்சு
புதுடில்லி: போர் நிறுத்த அறிவிப்புக்குப் பின், இந்தியா - பாகிஸ்தான் இடையே டி.ஜி.எம்.ஓ.,க்கள் நேற்று பேச்சு நடத்தினர். இருதரப்பிலும் இனி தாக்குதல் நடத்தக்கூடாது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பஹல்காம் சம்பவத்திற்கு பதிலடியாக, 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற பெயரில், நம் பாதுகாப்புப் படையினர் பாகிஸ்தான் மீது தாக்குதல் தொடுத்தனர். இதற்கிடையே கடந்த 10ம் தேதி, இருதரப்பிலும் போர்நிறுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து, இருநாடுகளின் டி.ஜி.எம்.ஓ., எனப்படும் ராணுவ நடவடிக்கைகளுக்கான டைரக்டர் ஜெனரல்கள் நேற்று பேச்சு நடத்தினர்.
அப்போது, இருதரப்பிலும் போர் நிறுத்த நடவடிக்கைகளை சுமூகமாக கடைப்பிடிப்பது, ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவம்கூட நிகழக்கூடாது எனவும், எந்தவொரு ஆக்கிரமிப்பு மற்றும் விரோத நடவடிக்கைகள் துவங்கக்கூடாது எனவும் பரஸ்பரம் உறுதி செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும்
-
வெள்ளியங்கிரி மலையில் 15 வயது சிறுவன் பலி; தரிசனம் முடிந்து கீழே இறங்கும்போது சோகம்
-
இந்தியா-பாகிஸ்தான் மோதல்; மே 19ல் பார்லி., குழுவிடம் விளக்கம் அளிக்கிறார் விக்ரம் மிஸ்ரி!
-
தங்கம் விலை நேற்று ரூ.2,360 சரிவு; இன்று சவரனுக்கு ரூ.120 உயர்வு!
-
"நீங்கள் எங்க ஹீரோ அங்கிள்" - பிரதமருக்கு நன்றி சொன்ன இமாம் பேரன்
-
பார்லி சிறப்புக் கூட்டம் தேவையில்லை; காங்கிரஸ் கோரிக்கைக்கு சரத்பவார் கடும் எதிர்ப்பு
-
இந்தோனேசியாவில் வெடிகுண்டு வெடித்து 13 பேர் பலி